- Details
-
Hits: 134
.JPG)
யாழ்பாணத்தில் வரலாற்று முக்கியமிக்க கோயில்களில் கோட்டை முனீஸ்வரர் கோயிலும் ஓன்று. யாழ்பாணத்தில் இருக்கும் வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த கோட்டையின் அருகே இருக்கும் இவ்வாலயம் முனியப்பர் ஆலயம் எனவும் அழைக்கப்படுகிறது. இற்றைக்கு ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒல்லாந்தர் யாழ்பாணத்தை ஆட்சி செய்யும் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டதாக அறியமுடிகின்ற போதும் யாரால் கட்டப்பட்டது என அறிய இயலவில்லை. அழகான இயற்கை சூழ்நிலையில் அமைந்த இக்கோயில் இடையில் நாட்டு பிரச்சனைகள் காரணமாக சிதைவுற்று வழிபட முடியாதிருந்த போதும் தற்போது மீண்டும் புனரமைக்கப்பட்டு அழகுற விளங்குவதுடன் பக்தர்கள் தொடர்ந்து வழிபடவும் கூடியதாக உள்ளது. தினமும் மூன்று வேளை பூசை நடைபெறுவதுடன் வருடாவருடம் அலங்கார உற்சவமும் நடைபெறுகிறது. அரசமரத்தை தல விருட்சமாக கொண்ட இத்தலம் யாழ்நகர் வாழ் வர்த்தகர்களாலும் , மக்களாலும் சிறப்பாக வழிபடப்படுகிறதுடன் நிர்வகிக்கப்பட்டும் வருகிறது.