Oorpakkam Logo    

My Oor

 

 

யாழ்பாணம்

யாழ்பாணமானது யாழ் மாவட்டத்தின் தலைநகரமாகும். இலங்கையின் முக்கியமான நகரங்களுள் ஒன்றான இது, இலங்கையின் 14 மாநகர சபைகளுள் ஒன்றாகும். உண்மையில் யாழ்பாணம் என்றொரு கிராமம் இல்லை. மாவட்டத்தின் தலைநகராக உள்ள இது, சுண்டுக்குளி, கொழும்புத்துறை, வண்ணார் பண்ணை, குருநகர், நல்லூர் போன்ற பல கிராமங்களின் பகுதிகளை உள்ளடக்கியது.

யாழ் இசைத்த பாணன் ஒருவனுக்கு பரிசாக வழங்கப்பட நிலப்பகுதி என்பதால் இம்மண்ணானது யாழ்பாணம் என அழைக்கப்படுகிறது. அதனாலே இந் நகரத்துக்கும் அப்பெயர் வந்தது. நல்லுறானது யாழ் அரசின் தலைநகராக இருந்தபோது இது குடிகள் வாழும் முக்கிய பகுதியாக இருந்தது. பல இறங்குதுறைகள் இங்கே இருந்தன. (கொழும்புத்துறை) அவற்றின்மூலம் பல வியாபார நடவடிக்கைகள் இங்கே இடம்பெற்றன. முஸ்லிம்களின் பெரிய குடியிருப்பும், வியாபார நிலையமும் இங்கே இருந்தன.

பிற்காலத்தில் போர்த்துக்கேயர்களால் நல்லூர் இராசதானி கைப்பற்றப்பட்டபோது தலைநகை நல்லூரிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு மாறியது. பாதுகாப்பு மற்றும் கடல்வழிப் போக்குவரத்து வசதிகருதி நிர்வாக காரியங்கள் இடமாற்றப்பட்டன. யாழ் கோட்டையானது யாழ்ப்பாணத்தின் பல கோயில்களை இடித்துப் பெறப்பட்ட கற்களின்மூலம் கட்டப்பட்டது. அத்தோடு யாழ்ப்பாணம் பிராந்திய முக்கியத்துவம் பெற்றது.

தேசத்தின் தனிப்பட்ட சந்தையாக, முக்கியத்துவம் நிறைந்த நகரமாக தற்போது இது இருந்துவருகிறது. A9 வீதி மூலமாக மட்டுமே நாட்டுடன் இணைக்கப்பட்டுள்ள இது இலங்கைத் தமிழர்களின் கலாசாரத் தலைநகரமாகும்.

எமது இணையத்தளத்தின் அன்பர்கள் ...

2007 ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் ...

வரலாற்றுத் தகவல்களின்படி காரைநகரில் ...

காரைநகரின் அமைந்திருந்து அடியார்களுக்கு ...

இவ்வூரைச் சேர்ந்த நலன் விரும்பிகளால், ...

காரைநகரானது யாழ்ப்பாணத்திற்கு ...

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ...

1725 ஆம் ஆண்டளவில் இக்கோயில் ஸ்தாபிக்கப்பட்டது. ...

கசூரினா கடற்கரையானது யாழ்ப்பாணத்தின் ...

நெல்லை : உன்னங்குளம் கிராமத்தில்  ...

மதுரை : தேனி மாவட்டத்தில் வைகை ...

குலசேகரம் : குலசேகரம் அருகே ...

தேவையான பொருட்கள் : அன்னாசி ...

தேவையான பொருட்கள்: ரவை - 1 கப் ...

தேவையான பொருட்கள்: கடலைமா - 3கப்சீனி ...

காணொளி