- Details
-
Hits: 260
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சரான ராஜூவின் மகனான தமிழ்மணி என்பவர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வேகத்தடை உள்ளதை கவனிக்காமல் சென்றதால் விபத்தில் சிக்கினார். இதில் பலத்த காயமடைந்த உயிருக்குஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்திற்கான காரணம்,
அமைச்சர் செல்லூர் ராஜூவின் மகன் தலைகவசம் அணியாமலும், செல்போனில் பேசியப்படியும் சென்றுள்ளார். செல்போனில் பேசியப்படி சென்றதால் வேகத்தடையை கவனிக்கவில்லை. இதனால் அவரது உடலில் பலத்தகாயம் ஏற்பட்டதால் உயிரிழக்க நேர்ந்தது.
முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் செய்தி
செல்வன் தமிழ்மணியின் அகால மரணத்தால் ஆற்றொணாத் துயரத்தில்ஆழ்ந்திருக்கும் திரு. செல்லூர் கே.ராஜூ அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், செல்வன் தமிழ்மணியின் ஆன்மா எல்லாம் வல்ல இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு தனது இரங்கல் செய்தியில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.