- Details
-
Hits: 70
விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தைகள் தி
ரைப்பட விழாவை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு, வா, சம்பத். இ,ஆ,ப,. அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார், குழந்தைகள் திரைப்படங்கள். பள்ளி மாணவ - மாணவியர்களுக்கு
அவர்களின் அறிவாற்றலையும். சிந்தனையையும் தூண்டும் வகையிலும். மாணவ பருவத்தில் நல்ல கருத்துக்களை அறிந்துகொள்ளும் வகையிலும் அமையும், 10 நாட்கள் நடைபெறும் குழந்தைகள் திரைப்பட விழாவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ. மாணவியர்கள் கண்டு களித்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது, விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேச்சு,
விழுப்புரம் கல்யாண் திரையரங்கில் குழந்தைகள் திரைப்பட தொடக்க விழா மாவட்ட ஆட்சித் தலைவர் திரு, வா, சம்பத். இ,ஆ,ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைவர் திரு, வா, சம்பத். இ,ஆ,ப. அவர்கள் குத்துவிளக்கேற்றி குழந்தைகள் திரைப்பட விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது, விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும். இந்திய குழந்தைகள் திரைப்படச் சங்கமும் இணைந்து பள்ளி மாணவ. மாணவியர்களுக்கு அவர்களின் அறிவாற்றலையும். சிந்தனையையும் தூண்டும் வகையிலும். மாணவ பருவத்தில் நல்ல கருத்துக்களை அறிந்துகொள்ளும் வகையிலும் நேற்று (22,08,2012) தொடங்கி வருகின்ற 04,09,2012 வரை 10 நாட்களுக்கு குழந்தைகள் திரைப்பட விழா மாவட்டத்தில் உள்ள 26 திரையரங்குகளில் நடைபெறுகிறது,
விழுப்புரம். திண்டிவனம். செஞ்சி. திருக்கோவிலு}ர். கள்ளக்குறிச்சி. சங்கராபுரம். சின்னசேலம். உளுந்தூர்பேட்டை. தியாகதுருகம் ஆகிய பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் பால்ய மேதை. ஆயிஷா. முதலில் நீங்கள். துபாஷி. ஹயாத் ஆகிய திரைப்படங்கள் காண்பிக்கப்பட உள்ளன.10 நாட்களில் 50 காட்சிகள் காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது, கட்டணம் ஏதுமின்றி இத்திரைப்படங்கள் மாணவ. மாணவியர்களுக்கு காண்பிக்கப்படுகின்றன.50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ. மாணவியர்கள் இத்திரைப்படங்களை கண்டு களித்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது,
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தொரிவித்தார்,
இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் கோட்டாட்சியர் திரு. எஸ். இராதாகிருஷ்ணன். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு, ச.பாண்டியன். முதன்மை கல்வி . திரு, விஜய் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.