Oorpakkam Logo    

My Oor

 

 

குரூப்-2, குரூப்-7 தேர்வு காஞ்சீபுரம் மாவட்டத்தில் 20 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்

காஞ்சீபுரம் மாவட்டத்திலிருந்து குரூப்-2, குரூப்-7 தேர்வுகளை சுமார் 20 ஆயிரம் பேர் எழுதினர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 (சிஎஸ்எஸ்இ-1) மற்றும் குரூப்-7 (பி) தேர்வுகள் இன்று (12.8.2012) காலை மற்றும் பிற்பகல் ஆகிய 2 வேலைகளில் தமிழகம் முழுவதும் நடந்தது. இந்த தேர்வில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சீபுரம் தாலுகாவில் 16 மையங்கள், செங்கல்பட்டில் 9 மையங்கள், தாம்பரத்தில் 12 மையங்கள் என மொத்தம் 37 தேர்வு மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அம்மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 25 ஆயிரத்து 700 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். ஆனால் தேர்வில் சுமார் 20 ஆயிரம் பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதியதாக தெரியவந்துள்ளது. 

 

அனைத்து தேர்வு மையங்களிலும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். தலா ஒரு துணை தாசில்தார், ஒரு வருவாய் ஆய்வாளர் மற்றும் ஒரு காவலர் அடங்கிய 18 மொபைல் குழுக்கள் அமைக்கப்பட்டும், 11 பறக்கும் படை அமைக்கப்பட்டும் தேர்வு கண்காணிக்கப்பட்டது. ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் தேர்வர்களின் நலன் கருதி குடிநீர், கழிப்பிட வசதிகள், சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்படுத்திதரப்பட்டன.

நெல்லை : உன்னங்குளம் கிராமத்தில்  ...

மதுரை : தேனி மாவட்டத்தில் வைகை ...

குலசேகரம் : குலசேகரம் அருகே ...

புதுடெல்லி : சமாஜ்வாடி கட்சி ...

மும்பை : சிவசேனா தலைவர் பால் ...

ஸ்ரீரங்கப்பட்டினம்: கர்நாடக ...

காந்தி நகர்: மத்திய அரசு வழங்கிய ...

சென்னை: சிதம்பரம் அண்ணாமலை ...

சென்னை: அரசு கல்லூரி மாணவர்கள், ...

தேவையான பொருட்கள் : அன்னாசி ...

தேவையான பொருட்கள்: ரவை - 1 கப் ...

தேவையான பொருட்கள்: கடலைமா - 3கப்சீனி ...

எமது இணையத்தளத்தின் அன்பர்கள் ...

2007 ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் ...

வரலாற்றுத் தகவல்களின்படி காரைநகரில் ...

காணொளி